டெல்லி மாநகராட்சியில் மோதல்: ஆம் ஆத்மி, பா.ஜ.க. போலீசில் புகார்

டெல்லி மாநகராட்சி மாமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆம் ஆத்மி, பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சி மாமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலைக்குழு தேர்தலில் ஒரு ஓட்டு செல்லாது என்று புதிய மேயர் ஷெல்லி ஓபராய் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடும் அமளி ஏற்பட்டது.

ஆம் ஆத்மி, பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் பாட்டில்களையும், ஆப்பிள்களையும் எறிந்தனர். இரு கட்சி பெண் கவுன்சிலர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாய் தாக்கினர்.

இந்த அமளியில் அசோக் மனு என்ற கவுன்சிலர் மயக்கம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். கடும் அமளியைத் தொடர்ந்து, மாமன்ற கூட்டம் நாளைக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி, பா.ஜ.க. கட்சியினர் பரஸ்பரம் அடுத்தவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com