சிறப்பு கூட்டத்தொடர் நிறைவு: நாடாளுமன்ற இரு அவைகளையும் ஒத்திவைத்தார் ஜனாதிபதி

சிறப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த வாரம் நடந்தது. இதில் முக்கியமாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் 20-ந்தேதியும், மாநிலங்களவையில் 21-ந்தேதியும் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த இரு அவைகளையும் ஜனாதிபதி கடந்த 26-ந்தேதி முறைப்படி ஒத்திவைத்திருப்பதாக நாடாளுமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது, புதிய கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com