குஜராத்தில் சிங்கம் தாக்கியதில் சிறுவன் பலி

சிங்கம் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் சிங்கம் தாக்கியதில் சிறுவன் பலி
Published on

அம்ரேலி,

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பனியா கிராமத்தில் தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு சென்றபோது 7 வயது சிறுவனை சிங்கம் கடித்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுவனின் உடல் ஆற்றுக்கு அருகே மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிர் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள பகுதியில் சுற்றி திரிந்த 2 சிங்கங்களை பிடித்ததாக வனத்துறை துணை பாதுகாவலர் ஜெயந்த் படேல் தெரிவித்துள்ளார். பிடிபட்ட 2 சிங்கங்களும் கிரான்காச் விலங்கு பராமரிப்பு மையத்திற்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். சிங்கம் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com