கருத்து வேறுபாடு: காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலன் கைது

சமீபத்தில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கருத்து வேறுபாடு: காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலன் கைது
Published on

திருவனந்தபுரம்,

நெருக்கமாக இருந்து விட்டு தொடர்பை துண்டித்ததால் காதலியை பழிவாங்க அவருடைய ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சக்தி குளங்கரை பகுதியை சேர்ந்தவர் எட்வின் (வயது 31). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அப்போது காதலிக்கு தெரியாமல் அவரது ஆபாச படம் மற்றும் வீடியோக்களை தன்னுடைய செல்போன் மூலம் எட்வின் எடுத்து வைத்திருந்தார்.

இதற்கிடையே சமீபத்தில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இளம்பெண், எட்வினுடனான தொடர்பை துண்டித்தார். இது எட்வினுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் காதலியை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கியுள்ளார். அதில் இளம்பெண்ணின் ஆபாச படம் மற்றும் வீடியோக்களை எட்வின் பகிர்ந்து உள்ளார். இதை அறிந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து இளம்பெண் சக்தி குளங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வினை கைது செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com