16 வயது சிறுமியை சிவப்பு விளக்கு பகுதியில் விற்ற காதலன்... கொல்கத்தாவில் பரபரப்பு சம்பவம்

போலீஸ் உதவி எண்ணுக்கு போன் செய்த சிறுமி, தன்னை காப்பாற்றும்படி கண்ணீருடன் பேசினார்.
16 வயது சிறுமியை சிவப்பு விளக்கு பகுதியில் விற்ற காதலன்... கொல்கத்தாவில் பரபரப்பு சம்பவம்
Published on

கொல்கத்தா,

வீட்டைவிட்டு வெளியேறினார்

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஷபிகுல் மொல்லா (20) என்ற வாலிபருக் கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர் சிறுமியிடம் காதல் வார்த்தைகள் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமி, தனது காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டர்.

நேற்று முன்தினம் போலீஸ் உதவி எண்ணுக்கும், குழந்தைகள் உதவி எண்ணுக்கும் போன் செய்த சிறுமி, தன்னை காப்பாற்றும்படி கண்ணீருடன் பேசினார். இதைத் தொடர்ந்து சிறுமி குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டனர். இதுதொடர்பாக சிறுமியை அழைத்து சென்ற வாலிபர் ஷபிகுல் மொல்லா (20) மற்றும் சஹருல் லஸ்கர் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விற்பனை செய்தார்

போலீசார் நடத்திய விசாரணையில், காதலன் பேச்சை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமியை, கொல்கத்தாவில் விபசார விடுதிகள் நிறைந்த சோனாகச்சியில் சஹருல் லஸ்கர் என்பவரிடம் ஷபிகுல் மொல்லா பணத்துக்காக விற்றது தெரியவந்தது. கைதான இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com