குஜராத் சட்டசபையில் பா.ஜ.க- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடிதடி மோதல்

குஜராத் சட்டசபையில் பா.ஜ.க- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது ஒருவருக்கொருவர் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். #BJP #Congress
குஜராத் சட்டசபையில் பா.ஜ.க- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடிதடி மோதல்
Published on

அகமதாபாத்

குஜராத் சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது இன்றை கூட்டத்தில் பாரதீய ஜனதா -காங்கிரஸ் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டனர் . ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டினர், சூடான விவாதங்களில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சபாநாயகர் பத்து நிமிடம் சட்டசபையை ஒத்திவைத்தார்,

இருந்தும் மீண்டும் சபை கூடியதும் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அகமதாபாத்தில் உள்ள ஆசரம் ஆசிரமத்தில் இரண்டு குழந்தைகளின் இறப்பு குறித்து விசாரணை கமிஷனின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தபோது, கேள்வி நேரத்தின் முதல் கேள்வியே ஜிக்னேஷ் மேவானியிடம் கேட்டார். விவாதம் 21 நிமிடங்கள் ஆனது.

வேளாண்மைத்துறை மந்திரி ஆர்.சி.பால்து வேளாண்மை தொடர்பான அறிக்கையை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது அறிக்கையை வீசி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களும் பாஜக எம்.எல்.ஏக்களும் அமளியில் ஈடுபட்டனர். வாக்குவாதம் பெரிதாகி பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாம் டுதட் திடீரென அங்கு இருந்த மைக்கை பிடுங்கி பாஜக எம்.எல்.ஏ ஜெகதீஷ் பஞ்சாலை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. குஜராத் சடசபையில் நடைபெற்ற இந்த அடிதடியால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com