ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் சிக்கினார்

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் சிக்கினார்
Published on

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் எலகங்கா தாலுகா அலுவலகத்தில் அசோக் என்பவர் நில அளவையராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாகலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனக்கு சொந்தமான குறிப்பிட்ட நிலத்திற்கு வரைபடம் கேட்டு எலகங்கா தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்காக அவர் அசோக்கை சந்தித்து பேசினார். அப்போது அசோக், நில வரைபடம் தரவேண்டும் என்றால், ரூ.20 ஆயிரத்தை லஞ்சமாக வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரசேகர் இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அறிவரையின்படி, அசோக்கை சந்தித்து, ரூ.5 ஆயிரம் லஞ்சப்பணத்தை சந்திரசேகர் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com