

புதுடெல்லி,
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன், பி.குமார், மல்லிகார்ஜுன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சந்திர தாரி சிங் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுக்களை பரிசீலித்த டெல்லி ஐகோர்ட்டு, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை மே 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.