மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவர பிரிக்ஸ் நாடுகள் முன்வர வேண்டும்; சீன அதிபர் அழைப்பு

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவர பிரிக்ஸ் நாடுகள் முன்வர வேண்டும்; சீன அதிபர் அழைப்பு
Published on

டெல்லி,

மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவர பிரிக்ஸ் நாடுகள் முன்வர வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தலைமை ஏற்றுள்ள இந்த உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

சீன அதிபர் அழைப்பு

இந்நிலையில், மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவர பிரிக்ஸ் நாடுகள் முன்வர வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், மேற்கு ஆசியா, வளைகுடா நாடுகளின் அமைதியை கொண்டுவர பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது.

மேற்கு ஆசியா, வளைகுடாவில் நிலைமை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே செல்கிறது. அங்கு நடைபெற்று வரும் போரால் அப்பகுதியில் உள்ள மக்கள் பலவற்றை இழந்துள்ளனர். அந்த போரால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. பிரிக்ஸ் நாடுகள் இணைந்து மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவர முன்வர வேண்டும்’ என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com