

புதுடெல்லி,
செல்வாக்குமிக்க 'பிரிக்ஸ்' மாநாட்டை ‘வங்காளதேசம் புறக்கணித்தது எதிர்விளைவை ஏற்படுத்தும்’ என ஷேக் ஹசீனா கருத்து தெரித்துள்ளார்.
18-வது 'பிரிக்ஸ்' நாடுகளின் மாநாட்டை கடந்த மாதம் டெல் லியில் இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. இதில் சீன அதிபர் ஜின்பிங், ரஷியா அதிபர் விளாடிமர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரம போசா, அமீரக இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனிப்பட்ட முறையிலும் கலந்து கொண்டார்.
'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்க 'பிம்ஸ்டெக்' அமைப் பின் தற்போதைய தலைவர் என்ற முறையில், வங்காளதேச பிரதமர் தாரிக் ரகுமானுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. ஆனால் அதனை புறக்கணித்து கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா செல்வாக்குமிக்க 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டை புறக்கணித்த வங்காளதேச பிரதமர் தாரிக் ரகுமானின் செயல் முதிர்ச்சியற்றது மற்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என கூறினார்.
ஷேக் ஹசீனா கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக தனது அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து வங்காளதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.