குண்டும் குழியுமான சாலையில் நின்று புகைப்படம் எடுத்த மணப்பெண் - அரசுக்கு சூசக கோரிக்கை

நிலம்பூர் அருகே சாலையை சீரமைக்க கோரி குண்டும் குழியுமான சாலையின் நின்று மணப்பெண் எடுத்து புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
குண்டும் குழியுமான சாலையில் நின்று புகைப்படம் எடுத்த மணப்பெண் - அரசுக்கு சூசக கோரிக்கை
Published on

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் நிலம்பூர் அருகே உள்ளது பூக்கோட்டு பாலம். இங்கு வசிப்பவர் ஸீஜீஷா(23). இவருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமண மண்டபத்துக்கு இவர் காரில் சென்றபோது ரோட்டில் ஏகப்பட்ட குண்டு குழிகள் இருந்ததுள்ளது.

இதனை பார்த்த மணப்பெண் ஸீஜீஷா காரை விட்டு இறங்கி குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்த சாலையில் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பின்பு மண்டபத்திற்கு சென்று மணப்பெண் ஸீஜீஷா தாலி கட்டிக் கொண்டார்.

குண்டும் குழியுமான சாலையில் நின்று மணப்பெண் ஸீஜீஷா எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com