புனேவில் பாலம் இடிந்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு - மராட்டிய முதல்-மந்திரி நிவாரணம் அறிவிப்பு


புனேவில் பாலம் இடிந்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு - மராட்டிய முதல்-மந்திரி நிவாரணம் அறிவிப்பு
x

படுகாயமடைந்த 32 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே அருகே அமைந்துள்ள மாவல் தாலுகாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இன்று அங்குள்ள டெகு பகுதியில் இந்திரயானி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தின்போது பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த சுமார் 20 முதல் 25 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யபப்ட்டுள்ளது.

மேலும் 32 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story