கொல்கத்தாவில் பழமையான இரண்டடுக்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து பலர் சிக்கியுள்ளனர், மீட்பு பணிகள் தீவிரம்

கொல்கத்தாவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் பழமையான இரண்டடுக்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து பலர் சிக்கியுள்ளனர், மீட்பு பணிகள் தீவிரம்
Published on

கொல்கத்தா,

தெற்கு கொல்கத்தாவில் பழமையான பாலமான மெஜெர்காத் இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்த போது அதன் அடிப்பகுதியில் அதிகமான வாகனங்கள் சிக்கியிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும் சிக்கியுள்ளது. மேற்பகுதியிலிருந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. கீழ்பகுதியில் சிக்கியுள்ள வாகனங்களை மீட்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மீட்பு குழுவினர் குவிந்து வருகின்றனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாலத்தின் இடிபாடுகளை அகற்ற வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி ஐந்து பேர் வரையில் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மிகவும் பழமையான பாலம் மழை காரணமாக விழுந்ததா? முறையான பராமரிப்பு இல்லாமல் விழுந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. பாலம் இரண்டடுக்கு பாலமாகும், பாலத்தின் மேற்குப்பகுதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு புதிய பாலத்தினை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாலம் இடிந்து விழுந்த பகுதியில் ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, முதலுதவிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com