இறந்த பெற்றோரின் நினைவாக சிலை அமைத்த சகோதரர்கள்

பெங்களூரு புறநகரில் இறந்த பெற்றோரின் நினைவாக சகோதரர்கள் சிலை வைத்துள்ளனர்.
இறந்த பெற்றோரின் நினைவாக சிலை அமைத்த சகோதரர்கள்
Published on

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் மாகடி தாலுகா காளிபாளையா ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது சகோதரர் சிவண்ணா. மஞ்சுநாத் ஆசிரியர் ஆவார். இவர்களது தந்தை சித்தப்பா, தாய் லிங்கம்மா. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இந்த நிலையில் மஞ்சுநாத்தும், சிவண்ணாவும் தங்களது பெற்றோருக்கு சிலை வைக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் தங்களது பெற்றோர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மார்பளவு சிலைகளை நிறுவினர். அதனை ரங்கநாத ஆனந்தா சுவாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து மஞ்சுநாத் கூறுகையில், எங்களது பெற்றோர் படிக்கவில்லை. அவர்கள் விவசாய கூலி தொழிலாளர்கள். அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்து எங்களை படிக்க வைத்து நல்வழி காட்டினர். அதனால் அவர்கள் நினைவாக சிலை நிறுவி வழிபட்டு வருகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com