லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்த காதலி கொடூர கொலை; கர்நாடகாவில் பயங்கரம்

கர்நாடகாவில் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த காதலியை, காதலர் இன்று கொடூர கொலை செய்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்த காதலி கொடூர கொலை; கர்நாடகாவில் பயங்கரம்
Published on

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஹொரமாவு என்ற பகுதியில் சந்தோஷ் தமி என்பவருடன் கிருஷ்ண குமாரி என்பவர் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

நேபாள நாட்டை சேர்ந்தவரான கிருஷ்ண குமாரி அழகு கலை நிபுணராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ண குமாரி கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்து உள்ளார்.

போலீசார் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பெங்களூரு நகரின் கிழக்கு பகுதிக்கான துணை காவல் ஆணையாளர் பீமாசங்கர் எஸ். குலெட் செய்தியாளர்களிடம் கூறும்போது, பெங்களூரு நகரின் ஹொரமாவு பகுதியில் லிவ்-இன் பார்ட்னர்களாக வாழ்ந்த சந்தோஷ் தமிக்கும், கிருஷ்ண குமாரிக்கும் இடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில், தகராறு முற்றியதில், கிருஷ்ண குமாரியின் தலையை, தமி சுவரின் மீது மோத செய்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அந்த பெண் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் தமியை இன்று கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com