கர்நாடகாவில் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி: முதல் மந்திரி எடியூரப்பா

கர்நாடகாவில் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யும் ஆணையில் முதல் மந்திரி எடியூரப்பா கையெழுத்திட்டுள்ளார். #KarnatakaCM #Yeddyurappa
கர்நாடகாவில் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி: முதல் மந்திரி எடியூரப்பா
Published on

பெங்களூரு,

பல்வேறு சர்ச்சைக்களுக்கு இடையே, கர்நாடக மாநில முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கர்நாடக மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். சித்தராமையாவுடன் அசோக் கெலாட், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, தலைமைச்செயலகம் வந்து தனது பணிகளை துவங்கிய முதல் மந்திரி எடியூரப்பா, ரூ. 5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யும் ஆணையில், தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com