

ஜம்மு,
ஜம்முவின் ஆர்.எஸ். புரா பிரிவில் அமைந்த எல்லை பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் பாகிஸ்தான் படையினர் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்காக கொண்டு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலடியாக எல்லை பாதுகாப்பு படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் படை ஆர்னியா பகுதி மற்றும் பல்வேறு கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் இந்த தொடர்ச்சியான அத்துமீறிய தாக்குதலை கருத்தில் கொண்டு தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.
#BSF #jawan #Jammu