

ஜலந்தர்,
பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) நேற்று இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இரவில் மர்ம பொருள் லேசான சத்தத்துடன் வானில் பறந்து வந்துள்ளது.
இதனை கவனித்த படையினர் அதனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன்பின்பு இன்று காலை அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
அதில், ஹெராயின் என்ற போதை பொருளாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் வகையில் 7 பாக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். அவற்றை பரிசோதனை நடத்தி வருகின்றனர்.