நாடு முழுவதும் ‘வாய்ஸ் ஓவர் வைபை’ சேவையை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.


நாடு முழுவதும் ‘வாய்ஸ் ஓவர் வைபை’ சேவையை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.
x

கோப்புப்படம் 

‘வைபை’ அழைப்பு எனப்படும் ‘வாய்ஸ் ஓவர் வைபை’ சேவையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடு தழுவிய அளவில் ‘வைபை’ அழைப்பு எனப்படும் ‘வாய்ஸ் ஓவர் வைபை’ சேவையை இந்த புத்தாண்டில், அறிமுகம் செய்துள்ளது.

இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யும். ‘வைபை நெட்வொர்க்’ மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான ‘மொபைல் சிக்னல்’ உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.

வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன்களில் ‘வைபை காலிங்’ என்பதை மட்டும் ‘செட்டிங்ஸ்’ அமைப்பில் இயக்க வேண்டும். இந்த தகவல்களை தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story