புதுச்சேரி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்

புதுவை சட்டசபை இன்று கூடுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் கடந்த 10-ந் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் புதுவை பட்ஜெட் ரூ.10,700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் சட்டசபை இன்று (திங்கட் கிழமை) மீண்டும் கூடுகிறது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்கள் நேரலையாக பார்க்கும் வகையில் புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சமூக ஊடகங்களான முகநூல், டுவிட்டர் மற்றும் யூடியூப் மூலம் காலை 9.45 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. செய்தி மற்றும் விளம்பரத்துறையின் முகநூல் https://fb.me/e/2Q7mkTUGv?ti=wa, டுவிட்டர் https://twitter.com/utofpuducherry, யூடியூப் https://youtu.be/nfKe4s1Bzag மற்றும் தூர்தர்ஷன் சேனல் முகநூல் https://facebook.com/events/s/government-of-puducherry-budge/1128506524684412/ மற்றும் யூடியூப் சேனல் https://youtu.be/epA5uI-Li9Y நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. பொதுமக்கள் சமூக வலைதள பக்கம் முகவரி மூலமாக சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதை நேரலையில் காணலாம். இத்தகவலை புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com