உத்தரபிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 5 பேர் பலி

24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 5 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இன்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது. இதில் பலர் உள்ளே சிக்கிய நிலையில் தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் அவர்களை வெளியில் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.

4 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் கடை, மருந்துகள் சேமிக்கும் குடோன் ஆகியவை இயங்கி வந்துள்ளது. மேலும் சமீபத்தில் இங்கு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளும் நடந்துள்ளதாகத் தெரிகிறது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com