குஜராத்தில் வேகமெடுக்கும் புல்லட் ரெயில் திட்ட பணிகள்: 50 கி.மீ. தண்டவாளப் பாதையில் நாளை மின் இணைப்பு

சூரத் - பிலிமோரா இடையிலான 50 கிலோ மீட்டர் நீள தண்டவாளப் பாதையில் நாளை மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
குஜராத்தில் வேகமெடுக்கும் புல்லட் ரெயில் திட்ட பணிகள்: 50 கி.மீ. தண்டவாளப் பாதையில் நாளை மின் இணைப்பு
Published on: 

காந்தி நகர்,

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து மராட்டியத்தின் மும்பைக்கு புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது. 508 கி.மீ தூரம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்திற்கு மேம்பாலங்கள், ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில்

மும்பை அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக, குஜராத்தில் உள்ள சூரத் மற்றும் பிலிமோரா இடையிலான இடையிலான முதல் கட்டப் பாதையில் மேல்நிலை மின் கம்பி அமைப்புக்கு நாளை மின்சாரம் பாய்ச்சப்பட உள்ளதாக தேசிய அதிவேக ரெயில் கழகம் தெரிவித்துள்ளது.

மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத் தில் நவீன 2 × 25 கிலோ வோல்ட் மேல்நிலை இழுவை அமைப்புபொருத்தப்பட்டு வருகிறது. மின்சார 'ரெயில்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்கும் கம்பிகள், மின்கம்பங்கள் மற்றும் தாங்கு கட்டமைப்புகளின் வலையமைப்பே மேல்நிலை மின் கம்பி அமைப்பாகும் என்றுதேசிய அதிவேக ரெயில் கழகம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சூரத் மற்றும் பிலிமோரா இடையிலான 50 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தப்பாதையில், உயர்மட்டப் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இருவழிப் பாதைகளும் அடங்கும். இந்தத் திட்டத்திற்கான மின்மயமாக்கல் வலையமைப்பில், 50 கிலோமீட்டர் வழித்தடத்தில் முக்கிய இடங்களில் 14 இழுவை துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மின் தொகுப்பிலிருந்து மின்சாரத்தைப் பெற்று மேல்நிலை இழுவை அமைப்புக்கு வழங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் செல்ல வேண்டாம்

மேலும், இந்த வழித்தடத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், பயணிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேல்நிலை மின்சாரக் கட்டமைப்புகளுக்கு அருகில் செல்லவோ, அவற்றைத் தொடவோ அல்லது அனுமதியின்றி எந்தவொரு பணியையும் மேற்கொள்ளவோ வேண்டாம் என்று தேசிய அதிவேக ரெயில் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

2027ம் ஆண்டின் மத்தியில் குஜராத்தில் சூரத் மற்றும் வாபி இடையே புல்லட் ரெயிலின் முதல் கட்டச் சேவையைத் தொடங்கவும், பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

X