டெல்லி- கொல்கத்தா இடையே புல்லெட் ரயில் திட்டம் தொடங்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

டெல்லி -கொல்கத்தா இடையே புல்லெட் ரயில் திட்டம் தொடங்க வேண்டும் என்பது எனது கருத்து என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
டெல்லி- கொல்கத்தா இடையே புல்லெட் ரயில் திட்டம் தொடங்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்
Published on

லக்னோ,

மும்பை -அகமதாபாத் இடையேயான புல்லெட் ரயில் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த திட்டத்தை துவங்கிவைத்தனர். இந்த நிலையில், மும்பை- அகமதாபாத் இடையேயான புல்லெட் ரயில் திட்டம் துவங்கியதற்கு விமர்சனம் செய்துள்ள உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், டெல்லி- கொல்கத்தா இடையே இந்த திட்டம் துவங்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அகிலேஷ் யாதவ் கூறியிருப்பதாவது:- டெல்லி-கொல்கத்தா இடையே உத்தர பிரதேசம், பீகார் வழியாக இந்த திட்டம் துவங்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து ஆகும். இந்த பகுதியில் வேலைவாய்ப்பற்ற ஏழை எளிய மக்கள் அதிகம் உள்ளனர். புல்லெட் ரயில் திட்டம் பெரும் செலவு பிடிக்கும் ஒன்றாகும். ரயில் சேவை துவங்கிய பிறகுதான் டிக்கெட் விலை எவ்வளவு என்பது தெரிய வரும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com