

முசாபர்நகர்,
உத்தரப் பிரதேசத்தில், 50 யாத்ரீகர்களை கொண்ட பேருந்து ஒன்று பிஜ்னூரிலிருந்து ராஜஸ்தானில் உள்ள பாகருக்கு, பின்னா பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் 30 யாத்ரீகர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்ப்படவில்லை.
மேலும், விபத்தில் காயமடந்தவர்களை பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.