

திருப்பதி,
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமியின் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பயன்பாட்டிற்காக ரூ.27.50 கோடி மதிப்பில் 25 புதிய மின்சார பேருந்துகளை (Electric Buses) ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளை ரிலையன்ஸ் நிறுவனமே அமைக்கும். பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களின் ஊதியம் அனைத்தையும் நிறுவனமே ஏற்கும். இதன் மூலம் திருமலை மலைப்பாதையில் சுற்றுச்சூழல் மாசுபடுவது பெருமளவில் குறையும்.
பக்தர்களின் வசதிக்காகவும், திருப்பதியின் தூய்மையைப் பாதுகாக்கவும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த பேருந்துகளை முழு இயக்கச் செலவுகளுடன் வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.