வங்கி அதிகாரிகள் டார்ச்சர்.. கணவரின் தற்கொலை கடிதத்துடன் மனைவி புகார்

வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக திருக்கனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் தனியார் வங்கி கொடுத்த டார்ச்சரால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டதாக மனைவி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறப்பதற்கு முன் கணவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பான மனுவில், தனியார் நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து தனது கணவர் ரூ.8 லட்சம் கடன் பெற்றார் என்றும், கடனை வசூலிக்க தனியார் நிறுவன மேலாளர், ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொடர் தொல்லையை தாங்க முடியாமல் விரக்தியில் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பெண்ணின் புகார் குறித்து திருக்கனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






