கார் டிரைவருடன் மனைவி உல்லாசம்; நூதன தண்டனை கொடுத்த தொழிலதிபர்

ராம சுப்பா ரெட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் முதலாளியின் மனைவி என்று கூட பார்க்காமல் வம்சி உல்லாசமாக இருந்துள்ளார்.
கார் டிரைவருடன் மனைவி உல்லாசம்; நூதன தண்டனை கொடுத்த தொழிலதிபர்
Published on

திருப்பதி,

ஆந்திர மாநிலம் ஒ.எஸ்.ஆர். கடப்பா நகரத்தை சேர்ந்தவர் ராம சுப்பா ரெட்டி தொழிலதிபரான இவரிடம் சோமசிலாவை சேர்ந்த வம்சி (வயது 25) என்பவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

அப்போது ராம சுப்பா ரெட்டியின் மனைவிக்கும் வம்சிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ராம சுப்பா ரெட்டி வம்சியிடம் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கண்டித்து வந்தார்.

இருப்பினும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்து வந்தது. ராம சுப்பா ரெட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் முதலாளியின் மனைவி என்று கூட பார்க்காமல் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட உடன் ஆத்திரம் அடைந்த ராம சுப்பா ரெட்டி கடந்த 3 நாட்களுக்கு முன்பு வம்சிக்கு தனது வீட்டின் அறையில் வைத்து மது குடிக்க வைத்தார். மது போதையில் மயங்கிய வம்சியை யாரும் நினைத்து கூடாத பார்க்க வகையில் கத்தியால் குத்தி துடிதுடிக்க நூதனமாக கொலை செய்தார்.

பின்னர் வம்சியின் பிணத்தை தனது காரில் போட்டுக்கொண்டு ஒண்டி மிட்டா வனப்பகுதியில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.

மகன் காணாமல் போனது குறித்து வம்சியின் தாய் கடப்பா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஒண்டி மிட்டா வனப்பகுதியில் வம்சி பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வம்சியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகனின் சாவுக்கு அவரது உரிமையாளர் காரணமாக இருக்கலாம் என வம்சியின் தாய் போலீசில் தெரிவித்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் ராம சுப்பா ரெட்டியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனது மனைவியுடனான கள்ளக்காதல் வைத்திருந்தால் வம்சியை கொலை செய்ததாக தெரிவித்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ராம சுப்பா ரெட்டியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com