ஜூன் 15 ம் தேதிக்குள் மாநில அரசுகளுக்கு 5.86 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும் -மத்திய அரசு

ஜூன் 15 ம் தேதிக்குள் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு 5.86 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
ஜூன் 15 ம் தேதிக்குள் மாநில அரசுகளுக்கு 5.86 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும் -மத்திய அரசு
Published on

புதுடெல்லி:

மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 29 ஆயிரம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் கையிருப்பு நிலவரம், உற்பத்தியாளாகளிடமிருந்து மாநிலங்களும், தனியா மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான எண்ணிக்கை போன்ற தகவல்களைக் கடந்த இரண்டு வார காலமாக மத்திய சுகாதார அமைச்சகம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.

தொடாந்து, மே மற்றும் ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வார காலத்துக்கு மத்திய அரசிடமிருந்து (இலவசமாக) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி தவணைகள் (கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின்), மே மற்றும் ஜூன் மாதங்களில் மாநிலங்களும் தனியா மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான எண்ணிக்கை போன்ற தகவல்களை மத்திய அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதால், மாநிலங்கள் உரிய திட்டத்தை வகுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 29 ஆயிரம் டோஸ் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

கூடுதலாக, தடுப்பூசி உற்பத்தியாளாகளிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஜூன் மாத இறுதி வரை 4 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரம் டோஸ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நேரடிக் கொள்முதலுக்கு வழங்கப்படும்.

கொரோனா தடுப்பூசித் திட்டத்தை நேமையாகவும் முறையாகவும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவை, தடுப்பூசிகளை செலுத்துவதற்காக, தடுப்பூசி மையங்களின் மாவட்ட வாரியான திட்டத்தைத் தயாரித்தல், இத்தகைய திட்டம் பற்றி பெருவாரியான மக்களிடையே விழிப்புணாவை ஏற்படுத்துவதற்காக பல்வேறு ஊடகத் தளங்களைப் பயன்படுத்துதல், மாநில அரசுகள் மற்றும் தனியா தடுப்பூசி மையங்கள், தங்களது தடுப்பூசி அட்டவணையை முன்கூட்டியே கோவின் டிஜிட்டல் தளத்தில் வெளியிடுதல், மாநில மற்றும் தனியா தடுப்பூசி மையங்கள், ஒரு நாளுக்கான தடுப்பூசி அட்டவணை வெளியிடுவதைத் தவித்தல், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசல் இல்லாமல் பாத்துக் கொள்ளுதல், கோவின் தளத்தின் வாயிலான முன்பதிவு சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்தல் என்பவையாகும்.

ஜூன் 15-ஆம் தேதி வரை செலுத்தப்படவுள்ள தடுப்பூசிகள் பற்றிய திட்ட அறிக்கையை தயா செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com