அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 லட்சத்து 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் - மத்திய பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் தகவல்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 லட்சத்து 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 லட்சத்து 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் - மத்திய பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தலைவர் பிரஜ்ராஜ் சர்மா, தலைநகர் டெல்லியில் பிரதமர் அலுவலகம், பணியாளர்துறை மற்றும் அணுசக்தித்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை சந்தித்து பேசினார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து இருவரும் கலந்து ஆலோசித்தனர். அப்போது, மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் குரூப் பி, குரூப் சி பிரிவில் 1 லட்சத்து 40 ஆயிரம் பணியிடங்கள் அடுத்த ஆண்டு(2021) மார்ச் மாதத்துக்குள் நிரப்பப்படும் என்று பிரஜ்ராஜ் சர்மா உறுதி அளித்தார். 2019-20-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 611 பணியாளர்களை நியமிக்க தேர்வு ஆணையம் ஏற்கனவே பிப்ரவரி மாதம் பரிந்துரைத்து இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், கூடுதலாக 85 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகளை ஜூன் மாதத்துக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும் அடுத்தக்கட்டமாக 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com