ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தல் நவ.16ல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்

வெங்கையா நாயுடு தனது எம்.பி பொறுப்பை ராஜினாமா செய்ததையடுத்து காலியாக உள்ள எம்.பி பொறுப்புக்கு வரும் நவம்பர் 16-ல் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தல் நவ.16ல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்
Published on

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வெங்கையா நாயுடு தனது பதவியை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு வரை இருந்த போதிலும் துணை ஜனாதிபதியாக தேர்வானதால், எம்.பி பொறுப்பை ராஜினாமா செய்தார்.


இதையடுத்து, காலியாக உள்ள இந்த பொறுப்புக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தலுக்கான அறிவிப்பானை 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் நவம்பர் 6 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com