

புதுடெல்லி
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியும் ரூ.325 கோடியில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு ரூ.195 கோடியும் தமிழக அரசு ரூ.130 கோடியும் வழங்குகிறது.