தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

சில நிறுவனங்களின் திவால்நிலை செயல்முறைக்கு உட்பட்ட அலைவரிசைகள் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

செல்போன் சேவைகளுக்கான 8 அலைவரிசைகளை ஏலம் விடுவதற்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது.

இந்த ஆண்டு காலாவதியாகும் சில நிறுவனங்களின் திவால்நிலை செயல்முறைக்கு உட்பட்ட அலைவரிசைகள் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

800, 900, 1800, 2100, 2300, 2500, 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் கிடைக்கும் அனைத்து அலைவரிசைகளும் ஏலத்தில் விடப்படும் என்றும் அதன் அடிப்படை மதிப்பு ரூ.96,317.65 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com