ரூ.19 ஆயிரம் கோடி செலவில் இந்திய கடற்படைக்கு 200 பிரமோஸ் ஏவுகணைகள்

200 பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்கு வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

இந்திய கடற்படைக்கு சுமார் ரூ.19 ஆயிரம் கோடி செலவில் 200-க்கும் மேற்பட்ட பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை வாங்குவதற்கு ராணுவத்துக்கான மந்திரிகள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்தியா-ரஷிய கூட்டு முயற்சியான பிரமோஸ் ஏரோ ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவக்கூடிய சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது. பிரமோஸ் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணைகள் ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் பறக்கும். இத்தகைய வலிமை மிக்க 200 பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்கு வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏவுகணைகளை வாங்குவதற்கான முறையான ஒப்பந்தம் அடுத்த சில மாதங்களில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com