

புதுடெல்லி
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை துணை நிதி மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் 141 பக்க அறிக்கையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்தும் தகவல் இடம் பெற்று உள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிர்ணயித்ததை விட 2. 86 சதவீத குறைவான விலையிலேயே பாஜக ஆட்சியில் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து உள்ளதாக குற்றஞ்சாட்டி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.