

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநில மந்திரிசபை கூட்டம், முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி தலைமையில் நடந்தது. அதில் எடுக்கப் பட்ட முடிவுகளை சுவேந்து அதிகாரி நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
மேற்கு வங்காள மாநில மின் பகிர்மான நிறுவனத்தின் மின்வினியோக பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3 மாதங்க ளுக்கு ஒருதடவை மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 3 மாத கட்டணத்தை செலுத்துவது அவர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது.
எனவே, மாதந்தோறும் கணக்கெடுக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதை ஏற்று, ஜனவரி மாதம் முதல் மாதந்தோறும் மின்சார பயன்பாடு கணக்கெடுக்கும் முறை அமலுக்கு வருகிறது.
மேலும், வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரமும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பட்டயம் படித்தவர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கும் திட்டம் ஜனவரி மாதம் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.