நவம்பர் 1 முதல் செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் கட்டாயம்

4ஜி, 5ஜி நெட்வொர்க்குகளில் இந்த வசதி செயல்பாட்டில் உள்ளது.
அழைப்பவரின் பெயர் கட்டாயம்
Published on: 

புதுடெல்லி,

நவம்பர் 1 முதல் செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் கட்டாயம் திரையில் தோன்றும் என மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்பேம் மற்றும் தெரியாத எண்களிலிருந்து வரும் போலி அழைப்புகளை தடுக்கும் வகையில், வரும் நவம்பர் 1 முதல் தொலைபேசியில் அழைப்பவரின் பெயர், மறுமுனையில் கால் அட்டெண்ட் செய்பவரின் பெயர் டிஸ்ப்ளேவில் தெரிவது கட்டாயம் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொலைபேசி மூலமாக தொடர்புகொள்பவர்கள் யார் என்ற உண்மையான பெயர் விவரங்களை அழைப்பை பெறுபவர்களின் திரையில் காண்பிக்க வேண்டும். தொடர்ந்து அதிகரித்து வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடிகள் குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்ப வசதியின் மூலம், உங்களது போனில் ஒருவருடைய எண் சேமிக்கப்படவில்லை என்றாலும், அவர் உங்களை அழைக்கும்போது அவரது பெயர் திரையில் தோன்றும். இதற்காக ட்ரூகாலர் போன்ற செயலிகளை நம்பியிருக்க வேண்டியதில்லை. அழைப்பவர் சிம் கார்டு வாங்கும்போது வழங்கிய அதிகாரப்பூர்வ கேஒய்.சி ஆவணங்களின் அடிப்படையில் உள்ள பெயரே திரையில் காட்டப்படும். நவம்பர் 1 முதல் இந்த நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பெயருக்கு பதிலாக இண்டர்நேஷ்னல் கால் என்று மட்டும் காண்பிக்கப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com