மனைவியை முட்டாள் என திட்டுவது கொடுமையாகாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

மனைவியின் மரணத்திற்கும் கணவரின் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களோ இந்த வழக்கில் இல்லை என நீதிபதிகள் கூறினர்.
சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
Published on: 

புதுடெல்லி,

மனைவியை முட்டாள், பயனற்றவள் என்று திட்டுவதும்,சிறிய விஷயங்களுக்காக அடிக்கடி கோபப்பட்டு கண்டிப்பதும் மட்டும் சட்டப்படி கொடுமையாகாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மராட்டியத்தை சேர்ந்த பியூஷ் என்பவருக்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் கனடாவின் டொராண்டோ நகருக்கு குடிபெயர்ந்தனர்.

இந்த நிலையில், 2023ம் ஆண்டு ஜூன் பந்தேதி. அந்தப் பெண் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 22வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மகளின் மரணத்திற்கு மருமகன் அவரது குடும்பத்தினரும் கொடுத்த வரதட்சணை கொடுமையே காரணம் என்று பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

திருமணத்தின்போது 15 பவுன் தங்கநகைகள் கொடுத்ததாகவும், திருமணத்துக்குப் பிறகும் தங்க மோதிரம். வளையல் உள்ளிட்டவற்றை கேட்டதாகவும், ரூ.1லட்சம் பணம் பெற்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மேலும், பியூஷ் தனது மனைவியை முட்டாள், பயனற்றவள் என்று திட்டியதுடன், சிறிய விஷ யங்களுக்குக்கூட கோபப் பட்டு கண்டித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் பியூஷ் மீது வரதட்சணைகொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் அவுரங்காபாத் அமர்வில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டும் மறுத்துவிட்டது.

இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

நேற்று அதில் கணவர் மனைவியை முட்டாள், பயனற்றவள் என்று அழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மட்டும் குற்றவியல் சட்டத்தின்கீழ் கொடுமையாகவோ, மிரட்டலாகவோ கருத முடியாது. அதிக கோபப்படும்

குணம் சிறிய விஷயங்களுக்காக கொண்டிருப்பதும், மனைவியைக்கண்டிப்பதும் மட்டும் குற்றவியல் கொடுமையாகிவிடாது.

மேலும், வரதட்சணை கேட்டதற்கான உறுதியான ஆதாரங்களோ, மனைவியின் மரணத்திற்கும் கணவரின் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களோ இந்த வழக்கில் இல்லை.

திருமண வாழ்க்கையில் கொடுமை நடந்ததாக பொதுவான குற்றச்சாட்டுகளை மட்டும் கூறுவது போதாது. குறிப்பிட்ட சம்பவங்களும், அவற்றை நிரூபிக்கும் ஆதாரங்களும் இருக்கவேண்டும்.

எனவே பியூஷுக்கு எதிராகத் தொடரப்பட்ட வரதட்சணை கொடுமை உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளையும், அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளையும் ரத்து செய்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

X