

புதுச்சேரி,
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழ் கட்சி உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் தேர்தல் பிரசாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. முன்னதாக வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே புதுச்சேரி தேர்தல்துறை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் நேர்மையாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்கு பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 31 வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.