காற்றை மறைக்க முடியுமா? விஜய் ஆட்சியில் அமர்வார்: புஸ்சி ஆனந்த் பேச்சு


காற்றை மறைக்க முடியுமா? விஜய் ஆட்சியில் அமர்வார்: புஸ்சி ஆனந்த் பேச்சு
x

வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான் என்று புஸ்சி ஆனந்த் கூறினார்.

புதுவை,

புதுவையில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது: விஜயை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பார்.காற்றை மறைக்க முடியுமா? புதுவை காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர். 3,4 மாதங்கள் தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் ஆட்சியை பிடிக்கலாம்.

இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம். வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான். புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026-ம் ஆண்டு விஜய் வருவார்" இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story