4 நாட்கள் பயணமாக கனடா பிரதமர் இந்தியா வருகை

கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி.
4 நாட்கள் பயணமாக கனடா பிரதமர் இந்தியா வருகை
Published on

மும்பை,

கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி. இவர் தனது மனைவியுடன் 4 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

தனி விமானம் மூலம் மராட்டிய மாநிலம் மும்பை வந்த மார்க் கார்னியை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். கார்னி மும்பையில் நாளை பல்வேறு தொழிலதிபர்களை சந்திக்கிறார்.

அதன்பின்னர், மராட்டிய பயணத்தை முடித்துக்கொண்டு மார்க் கார்னி 1ம் தேதி டெல்லி செல்கிறார். அவர் 2ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் மார்க் கார்னி சந்திக்கிறார்.

இதையடுத்து 4 நாட்கள் பயணத்தை நிறைவு செய்யும் மார்க் கார்னி 2ம் தேதி டெல்லியில் இருந்து கனடா புறப்பட்டு செல்ல உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com