

ஷில்லாங்,
ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ஆர்.சென் கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரித்து டிசம்பர் மாதம் 10ந் தேதி வழங்கிய தீர்ப்பில், மதத்தின் அடிப்படையில் தேசம் இரண்டாக பிரிக்கப்பட்ட போதே இந்தியாவை இந்து தேசம் என அறிவித்து இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முகமது யாகூப் மிர் தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு சட்ட ரீதியாக செல்லாது என்றும், அரசியல் சாசன கொள்கைகளுக்கு பொருந்தாதது என்றும் கூறி ரத்து செய்து நேற்று தீர்ப்பு கூறியது.