முக்கிய பாகம் மீதான சுங்க வரி ரத்து: டெலிவி‌‌ஷன் விலை குறைகிறது

முக்கிய பாகம் மீதான சுங்க வரி ரத்து செய்யப்பட உள்ளதால், டெலிவி‌‌ஷன் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய பாகம் மீதான சுங்க வரி ரத்து: டெலிவி‌‌ஷன் விலை குறைகிறது
Published on

புதுடெல்லி,

எல்.சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.க்களில் பயன்படுத்தப்படும் முக்கிய பாகமான ஓபன் செல் பேனல் (15.6 அங்குலம் மற்றும் அதற்கு மேற்பட்டது) மீது 5 சதவீதம் சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

தங்கள் விற்பனை குறைந்துள்ளதாக டி.வி. உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டில் டி.வி. உற்பத்தி நிறுவனங்களின் செலவை குறைத்து அவற்றுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

சுங்க வரி ரத்து காரணமாக டி.வி. உற்பத்தி செலவினம் சுமார் 3 சதவீதம் வரை குறையும் என்று கூறப்படுகிறது. இதனால் எல்.சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.க்களின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. டி.வி. உற்பத்தி செலவு 3 முதல் 4 சதவீதம் வரை குறையும் என்பதால் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்போவதாக பானசோனிக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com