இவிஎம் எந்திரங்களில் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இனி இடம் பெறும்: தேர்தல் ஆணையம்

பீகார் தேர்தலில் இந்த முறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்துகிறது.
புதுடெல்லி,
இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்கள் புகைப்படம் வண்ண புகைப்படமாக பயன்படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் தேர்தலில் இந்த முறையை அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் யார் என்பதை? வாக்காளர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல, வேட்பாளரின் பெயர்களும் பெரிய அளவிலான எழுத்தாக இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இவிஎம் இயந்திரத்தில் வேட்பாளரின் புகைப்படம் பிளாக்& ஒயிட் நிறத்தில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
Related Tags :
Next Story






