காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது: ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது: ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்
Published on

போபால்,

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. 7 மணி நேரம் பரபரப்பாக கூட்டம் நடைபெற்ற நிலையில், கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் சோனியா காந்தி நீடிப்பார் என்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ள சிவராஜ்சிங் சவுகான், பா.ஜ.வுடன் தொடர்பு வைத்துள்ளதாக ஜோதிராதித்யா மீது பொய்யான குற்றம்சுமத்தி வெளியேற்றினர். இப்போது அதே குற்றச்சாட்டை கபில் சிபல் , குலாம்நபி ஆசாத் போன்ற சீனியர் தலைவர்கள் மீதும் சுமத்தியுள்ளனர். இப்போது நடந்தது கட்சியின் செயற்குழு அல்ல. நாடகம். காங்கிரஸ் கட்சி இனி கரையேறாது. அந்தக் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com