

திருப்பதி,
திருப்பதியைச் சேர்ந்தவர் லாவண்யகுமார், கார் டிரைவர். இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை திருப்பதியில் இருந்து காரில் பக்தர்களை ஏற்றி கொண்டு திருமலையை நோக்கி புறப்பட்டார். 2-வது மலைப்பா தையில் சென்ற கார் திருமலை ஜி.என்.சி. டோல்கேட் அருகே திவ்யாராமம் பகுதியில் சென்றபோது, காரின் என்ஜினில் இருந்து திடீரெனப் புகை வந்தது. இதை கவனித்த அவர் உடனே சாலையோரம் காரை நிறுத்தினார். அடுத்த ஒருசில நிமிடங்களிலேயே தீ வேகமாகப் பரவி எரிந்தது. காரில் பயணம் செய்தவர்கள் கீழே குதித்து தப்பினர்.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருமலை தீய ணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. திருமலை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரின் பேட்டரி அதிக வெப்பமடைந்ததால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக, தெரிய வந்தது.