உப்பள்ளியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வியாபாரி சாவு

உப்பள்ளியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
உப்பள்ளியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வியாபாரி சாவு
Published on

உப்பள்ளி-

கதக் (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் தொட்டமணி (வயது 50). வியாபாரி. இவர் சொந்த வேலை காரணமாக கதக்கில் இருந்து மோட்டார் சைக்கிளில் உப்பள்ளிக்கு சென்றார். அவர் உப்பள்ளி அருகே வந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட தொட்டமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கேசுவப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொட்டமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கேசுவப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com