

மும்பை,
மராட்டியத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து ஜல்னா நகர் நோக்கி இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பிரதீக் ராம்கிஷன் அவரது மனைவி ஸ்ரேயா, 3 வயதான குழந்தை ஆகியோர் பயணித்தனர். சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் வெப்ருல் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த பிரதீக் ராம்கிஷன் அவரது மனைவி ஸ்ரேயா மற்றும் அந்த தம்பதியின் குழந்தை என 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.