சித்ரதுர்காவில் கார்- லாரி மோதல்; தம்பதி சாவு

சித்ரதுர்காவில் கார்- லாரி மோதயதில் தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
சித்ரதுர்காவில் கார்- லாரி மோதல்; தம்பதி சாவு
Published on

சிக்கமகளூரு-

தாவணகெரே (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் கரிபசப்பா (வயது60). இவரது மனைவி சாவித்திரி (53). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அதில், கரிபசப்பா விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் கரிபசப்பா தனது மனைவியுடன் காரில் பெங்களூரு சென்றார்.

கார் சித்ரதுர்கா டவுன் அருகே தமட்டதகல்லு கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கரிபசப்பா, சாவித்திரி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சித்ரதுர்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் பலியான 2 பேர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கரிபசப்பா, சாவித்திரி ஆகிய 2 பேரும் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது மகனை பார்க்க காரில் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com