

சிம்லா,
இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் கிராமம் அருகே பச்சட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது என துணை ஆணையாளர் ஆர்.கே. கவுதம் கூறியுள்ளார்.
இந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.