வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை

மங்களூருவில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.
வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை
Published on

பெங்களூரு,

கர்நாடகாவின் மங்களூரு துறைமுகத்தில் இருந்து சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த 12ம் தேதி லட்சத்தீவுக்கு சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 6 மாலுமிகள் பயணித்தனர்.

 கடந்த 14ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. பலத்த காற்றும் மற்றும் அலையில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கத்தொடங்கியது.

இதையடுத்து கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கப்பலில் இருந்த சிறிய ரக படகில் ஏறி உயிர் தப்பினர். ஆனால், சரக்கு கப்பல் மூழ்கியது. படகில் ஏறிய மாலுமிகள் அனைவரும் நடுக்கடலில் தத்தளித்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு கப்பலில் பயணித்தவர்கள் சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து மங்களூருவில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் நடுக்கடலில் தத்தளித்த 6 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவரும் மங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com